india

img

போராடும் விவசாயிகளுக்கு ஓவியங்கள் மூலம் ஆதரவை தெரிவிக்கும் பள்ளி மாணவர்.....

புதுதில்லி:
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரான அடியே பிரியா என்னும் 16 வயது ஓவியர் 2019 இந்தியா பதிவேடுகளின் புத்தகத்தில் (India Book of Records 2019) தன் பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பவர்.இவர், தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்குத் தன் ஒருமைப்பாட்டைத் தனக்கேயுரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். போராட்ட மையத்தில் காரல்மார்க்ஸ், குரு கோபிந்த் சிங், நெல்சன் மண்டேலா  முதலானவர்களின் பிரம்மாண்டமான ஓவியங்களை வரைந்து வைத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“முன்பு என் தந்தை ஒரு விவசாயி. பின்னர் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில்வேலைக்குச் சென்றுவிட்டார். எனினும் எங்களுக்கு நிலம் இருக்கிறது. மேலும் விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால், நாங்கள் எதிர்காலத்தில் சாப்பிட முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.இளம் ஓவியர் பிரியாவிடம் பேசுகையில், 13 வயதில் ஓவியங்கள் வரையத் துவங்கினேன். ஆரம்பத்தில் கடவுளர்கள் படங்களை வரையத் தொடங்கி, பின்னர் காரல் மார்க்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றஅறிஞர்கள் படங்களையும் தீட்டத் தொடங்கி னேன். குரு கோபிந்த் சிங் சித்திரத்தை உருவாக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாயின .  மூத்தவர்கள் போராட்டத்திற்கு  பல வடிவங்களில் பங்களிப்புகளைச் செய்திடமுடியும். சிறுவனான நான், என் கலைவடிவங்கள் மூலமாகத்தான் போராட்டத்திற்குஎன் ஆதரவைத் தெரிவிக்க முடியும் என்று கூறுகிறார்.

இவர் ஓவியங்களைப் பார்த்து வந்தவர்களில் ஒருவர், “குரு கோபிந்த சிங் முகம் கோபத்தைக் காட்டுவதுபோல் இருக்கிறதே” என்று இவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, பிரியா, “இப்போதுள்ள நிலைமைகளைக் கண்டால் குரு கோபிந்த சிங் மிகவும் கோபம் அடைவார் என்று நினைத்தேன். எனவே அதனை அவர் முகத்தில் பிரதிபலித்திட வேண்டும் என்று விரும்பினேன்,” என்று கூறியுள்ளார்.மாணவர் பிரியா, ‘2019 இந்தியா பதிவேடுகளின் புத்தக’ நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றதையும் மற்றும் துபாயில் நடைபெற்ற உலகக் கலை விழாவில் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றதையும்  கண்காட்சியில் வைத்திருந்தார். “அவனை மகனாகப் பெற்றதில் நாங்கள் பாக்கியம் பெற்றவர்கள். அவன் தன் சித்திரங்களைத் தீட்டும்போது இரவு முழுதும் கண்விழித்திருப்பான்” என்று அவர் தாயார் சரிதா கூறினார். (ந.நி.)

;