india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்றுப் பரவலால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

                                   ******************

தமிழகத்தில் புதிதாக 1,141 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது  திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                   ******************

கூகுள் நிறுவனத்தின் செயலிகள் கடந்த நிமிடங்கள் முடங்கிய நிலையில் மீண்டும் செயல்படத் தொடங்கின. 

                                   ******************

காஞ்சிபுரம் அருகேயுள்ள குழம்பேசுவரர் திருக்கோயில் திருப்பணியின் போது கிடைத்ததங்க நகைகள் அனைத்தும் அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்ப தாகக் கோட்டாட்சியர் சி.வித்யா திங்கள்கிழமை தெரிவித்தார்.

                                   ******************

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவ ரின் பாதுகாவலர் காயமடைந்தார். 

                                   ******************

மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                   ******************

இந்திய - வங்கதேச பிரதமர் களிடையே டிசம்பர் 17ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

                                   ******************

​2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முக்கியத் தொழில்துறையினருடன் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

;