india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கி யுள்ளார். 

                                       **********************

தமிழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

                                       **********************

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

                                       **********************

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய ஹாக்கி அணி தரவரிசையில் முன்னேற்றத் தை கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 4வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. 

                                       **********************

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகை மலை ரயில் 9 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டது.

                                       **********************

இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பதவிக்காலத்தை  2022 ஜனவரி 14 வரை வரை ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                                       **********************

இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர்விலை குறைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. 

                                       **********************
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில்பங்கு பெற்ற மாணவியை கைது செய்ய 4 தனிப்படை போலீசார் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

                                       **********************

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020” தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

                                       **********************

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

;