india

img

ஊனமுற்றோர் அமைப்பின் போராட்டம் வெற்றி... பார்வையற்றோருக்கான பயிற்சி நிறுவனங்களை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட்டது....

புதுதில்லி:
ஊனமுற்றோர் உரிமை அமைப்புகளின் போராட்டத்தால், கொல்கத்தா, செகந்திராபாத்தில் உள்ள பார்வை யற்றோருக்கான  தேசிய பயிற்சி நிறுவனங்களை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. 

மத்திய அரசின் கீழ் இயங்கும் கொல்கத்தா மற்றும் செகந்திரபாத் ஆகிய நகரங்களில் இயங்கிவரும் பார்வையற்றோர்க்கான தேசிய பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு எதிராக கொல்கத்தா மற்றும்  செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகள் சார்பில் கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, மத்திய அரசு தன் முடிவை ரத்து செய்துவிட்டது.இது ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகளுக்குக் கிடைத்த பகுதி வெற்றியாகும் என்று குறிப்பிட்டுள்ள ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன், எனினும்பயிற்சி நிறுவனங்களை இதர அமைப்புகளுடன் சேர்த்திடஅரசாங்கம் முன்மொழிவுகளை அனுப்பியிருப்பதாகவும், அரசு சாரா நிறுவனங்களிடம் கூட தாரைவார்த்திட அரசாங்கம் தயாராயிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதனை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இவற்றின் செயல்பாடுகள் முன்பு இருந்ததுபோலவே தொடர்வதற்கு, இதர ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகளுடன் கலந்துபேசி போராட்ட நடவடிக்கைகள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.(ந.நி.)

;