india

img

மோடி அரசின் அடுத்த தயாரிப்பு மாட்டுச் சாணம் பெயிண்ட்...... விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கட்காரி தகவல்...

புதுதில்லி:
மாட்டுச் சாணம் மற்றும் அதன் சிறுநீர், மனிதர்களுக்கு நல்லது; இதனைத் தொடர்ந்து குடித்தும், சாணத்தைப் பூசியும்வந்தால், எந்த நோயும் அண்டாதுஎன்று கொரோனாவை மட்டுமன்றி, புற்றுநோயையும் இது குணப்படுத்தும் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போது அவர்கள், மாட்டுச்சாணம், சிறுநீரை வைத்து பல் வேறு பொருட்கள் தயாரிக்கும் வேலையிலும் மத்திய அரசு மூலம் இறங்கியுள்ளனர்.கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் (chip)ஒன்றை, காமதேனு ஆயோக் கின் தலைவர் வல்லபாய் கத்திரியா அறிமுகப்படுத்தினார். `கவ்சத்வ கவாச்’ (Gausatva Kavach) என்ற பெயரிடப்பட்ட இந்த மாட்டுச்சாண சிப்- (chip), செல்போன்களிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், மாட்டுச் சாணத்தில் இருந்து ‘வேதிக் பெயிண்ட்’(Vedic Paint) தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அது விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்.இந்த புதிய வேதிக் மாட்டுச்சாண பெயிண்டானது, சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக் கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைகொண்டது என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

;