india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

உளவுப்பிரிவு தலைவர்கள் பணிக்காலம் நீட்டிப்பு

வெளி நாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பான ‘ரா’-வின் (Research and Analysis Wing - R&AW) தலைவர் சமந்த்குமார் கோயல், ஜூன் 30-ஆம்தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், அவர் ‘ரா’ அமைப்பின் செயலாளராக பணியாற்ற ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, உளவுப்பிரிவு (Intelligence Bureau - IB) தலைவர் அரவிந்த் குமாருக்கும்ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.

                             *****************  

‘எஸ்மா’ சட்டத்தை நீட்டித்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் ‘அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை’ (Essential Services Maintenance Act - ESMA),ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. நவம்பரில் அதனை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் ‘எஸ்மா’ சட்டத்தை  6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

                             *****************  

ஊரடங்கு விதிகளை மீறிய திருமணங்கள் செல்லாது..!

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத் தில், கொரோனா ஊரடங்கின் ஒருபகுதியாக, திருமண விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், தடையையும் மீறி, ரகசியமாகத் திருமணங்கள் நடைபெற்றதாக கூறி, இதுவரை 130 பேர்மீது ம.பி. மாநில அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே, கொரோனா ஊரடங்கில் ரகசியமாக நடந்த திருமணங்கள் செல்லாது என்றும்மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

                             *****************  

திருப்பதி பிரசாத லட்டு விற்பனை சரிவு!

ஆந்திர மாநி லத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தர்ம தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்களின் வருகையும் அங்கு வெகுவாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக நாளொன்றுக்கு 4 லட்சமாக இருந்த லட்டு விற்பனை தற்போது வெறும் 10 ஆயிரமாக சரிந்துள்ளது. உண்டியல் வருவாயும் ரூ. 4 கோடியிலிருந்து ரூ.30 லட்சமாகக் குறைந்துள்ளது.

                             *****************  

கணிசமாக அதிகரித்த ரொக்கப் பணப் புழக்கம்

2019-20 நிதியாண் டில், ரொக்கப் பணப்புழக்கம் 14.7 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால், இதுவே 2020-21 நிதியாண்டில் (2020  ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை) 16.8 சதவிகிதம் என்ற அளவிற்கு  உயர்ந்ததாக ரிசர்வ் வங்கி அறிக்கை  வெளியிட்டுள்ளது. கொரோனா கால தேவையைக் கருதி, மக்கள் முன்னெச்சரிக்கையாக கையில் பணம் வைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

;