india

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

உ.பி. காவல்துறை நோட்டீஸ் ரத்து!

வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலான பதிவுக்கு இடமளித்ததாக கூறி, ‘டுவிட் டர் இந்தியா’ நிர்வாக இயக்குநர் மணீஷ் மகேஸ்வரிக்கு உ.பி. காவல்துறை நோட்டீஸ்அனுப்பியிருந்தது. பெங்களூருவில் வசித்து வரும் டுவிட்டர் நிர்வாகி மணீஷ் மகேஸ்வரி, இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41(ஏ)-இன் கீழான பிரிவுகளை, ஒருவரை துன்புறுத்துவதற்கான ஆயுதமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கூறி, உ.பி.காவல்துறையின் நோட்டீஸை ரத்து செய்துள்ளது.

                                ************

முதல்வர் மாற்றம்  தெளிவாகி விட்டது! 

“முதல்வர் மாற்றம்குறித்து, எடியூரப்பாவே தெளிவுபடுத்தி விட் டார்” என்று கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி. யோகேஸ்வர் தெரிவித்துள்ளார். மேலும்,“அமைச்சர் பதவி யாருக்கும் நிரந்தரமல்ல! எடியூரப்பாவை மடாதிபதிகள் சந்தித்து வருகிறார்கள். மடாதிபதிகள் பெரியவர்கள். அவர்களை பற்றி நான் பேச மாட்டேன்” என்றும் கூறியிருக்கும் யோகேஸ்வர், தனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே தன்னை ‘சி.டி.’ யோகேஸ்வர் என்று அழைக்கிறார்கள் என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

                                ************

ராகுலின் செல்போனைக் கேட்கும் பாஜகவினர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் போது, ‘நான் பயன் படுத்திய ஒவ்வொரு செல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது’ என்று குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்நிலையில், தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி நம்பினால், அதனை விசாரணைக்காக விசாரணை அமைப்பிடம் அவா் ஒப்படைக்க வேண்டும்” என பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவா்தன் ரத்தோர் கூறியுள்ளார்.

                                ************

நாடாளுமன்றக் குழுத் தலைவராக மம்தா தேர்வு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வராகவுள்ள மம்தா பானா்ஜி, தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                                ************

பரம்பீர் சிங் மீது  மேலும் ஒரு வழக்கு!

மும்பை காவல் துறை முன்னாள் ஆணை யர் பரம்பீர் சிங், ஷியாம் சுந்தர் அகர்வால் என்ற கட்டுமானத் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி கேட்டதாக மெரின்டிரைவ் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பரம்பீர் சிங், தன்னைக் கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியதாகவும், நிலத்தைவலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டதாகவும் சரத் அகர்வால் என்பவர் அளித்தபுகாரின் பேரில் தானே-யின் கோப்ரி காவல்நிலையத்திலும் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;