india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தில்லி எய்ம்ஸ்-ஸில் நிதிஷ் குமார் அனுமதி!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். முன்னதாக நிதிஷ் குமார் தில்லி சென்ற நிலையில், அவர் பிரதமரை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை மறுத்த நிதிஷ்,மருத்துவ சிகிச்சைக்காகவே தில்லி வந்ததாக செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

                            ****************

காங்கிரஸ் புறக்கணிப்பா? என்சிபி மறுப்பு..!

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் இல் லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங் கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காங்கிரசைப் புறக்கணித்து சரத் பவார் மூன்றாவது அணி அமைப் பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், “அந்த தகவல்கள் தவறானது; காங்கிரஸ் இல்லாமல் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணி அமையும் என்ற பார்வை தவறானது” என என்சிபி கட்சியின் மூத்த தலைவர் மஜீத் மேமன் விளக்கமளித்துள்ளார்.

                            ****************

நவ்னீத் கவுர் வழக்கில் இடைக்காலத் தடை..!

மகாராஷ்டிராவின் அமராவதி மக்களவை தனித் தொகுதியில் 2019 தேர்தலில் சுயேட் சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகை நவ்னீத் கவுர் (35). இவர் போலியானசாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில்வெற்றிபெற்றதாக எழுந்த குற்றச்சாட் டில், மும்பை உயர்நீதிமன்றம் அவரதுசாதிச் சான்றிதழை ரத்து செய்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

                            ****************

தேவகவுடாவுக்கு  ரூ.2 கோடி அபராதம்!

பெங்களூரு அருகே ‘நைஸ்’ நிறுவனம் சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இதற்காக, ‘நைஸ்’ நிறுவனம், தேவகவுடா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேவகவுடா தனது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால், ரூ. 2 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

                            ****************

மம்தா வழக்கு விசாரணை தானாகவே நீதிபதி விலகல்!

‘நாரதா’ ஊழல் வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அமர்விலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் தானாகவே விலகிக் கொண்டார். அனிருத்தா போஸ் முன்னதாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால், தார்மிக அடிப்படையில் விலகிக் கொண்டுள்ளார். மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியும் இதேபோல விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

;