india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தில்லியிலும் ‘பெட்ரோல்’ ரூ. 100- ஐ தாண்டியது!

14 மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங் களில் ஒரு லிட்டா் பெட் ரோல் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ராஜஸ் தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டீசல்விலையும் ரூ. 100-ஐ கடந்தது. இந்நிலையில் தலைநகர் தில்லியிலும் பெட்ரோல்விலை ரூ. 100-ஐத் தாண்டியுள்ளது. புதனன்று தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் ஒருலிட்டர் 89 ரூபாய் 53 காசுகளுக்கும் விற்பனையானது.

                            *************** 

ரூ.4200 கோடியை வீணடித்த மோடி அரசு!

புதிய வருமான வரித் தளத்தில் ஐடிஆர் பைலிங், 15 CA/CB படிவங்கள் எனப் பலசேவைகள் பயன் படுத்த முடியாத அளவிற்கு முடங்கியுள் ளது. இந்நிலையில், “ஒன்றிய அரசு 4,200 கோடி ரூபாய்செலவு செய்து புதிதாக உருவாக்கியுள்ள வருமான வரித் தளம் மக்களின்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் குழப்பத்தை உருவாக்கியுள்ளது” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

                            *************** 

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி!

மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்பதால், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை ஒன்றிய - மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

                            *************** 

மாம்பழத்திற்குப் பதிலாக அன்னாசி பழம் பரிசு!

பிரதமர் மோடி மற்றும் வங்கதேச நாட்டின்எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேற்கு வங்கம், திரிபுரா, அசாம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதல்வர் களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை வங்கதேச பிரதமர்ஷேக் ஹசீனா பரிசாக அனுப்பி வைத்தார். இந்நிலையில், திரிபுரா முதல்வர்பிப்லப் குமார் தேவ், திரிபுராவில் விளையும் புகழ்பெற்ற ‘குயின்’ ரக அன்னாசி பழங்களை ஷேக் ஹசீனாவுக்கு அனுப்பிவைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

                            *************** 

சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம்!

நவ்ஜோத் சிங் சித்துவைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல் வர் அம்ரீந்தர் சிங்கும், தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந் தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயார். பஞ்சாப் மாநிலவளர்ச்சிக்காகவும், கட்சி நலன் கருதியும்சோனியா காந்தி எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

;