india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வேளாண் சட்டங்களையும் நாங்கள் அமல்படுத்துவோம்

புதிய கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகத்தில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து, புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதிலும் கர்நாடகமே முதல்மாநிலமாக இருக்கும் என்று தற்போது அறிவித்துள்ளார். இதற்காக, அமைச்சர் பி.சி.பாட்டீல் தலைமையில் குழு ஒன்றைஅமைத்திருக்கும் பொம்மை, “வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம்இரட்டிப்பாகும்” என்று கூறியுள்ளார்.

                             *****************

அம்ரீந்தர் சிங்கே  தலைமை வகிப்பார்!

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங்-கை மாற்ற வேண்டும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சரண்ஜித் சிங், திருபத் ராஜீந்தர் சிங், சுக்ஜிந்தர் சிங்,சுக்பிந்தர் சிங் ஆகிய 4 அமைச்சர்கள் ர்க்கொடி உயர்த்தியிருந்தனர். அவர்களை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத், டேராடூனில் சந்தித்துப் பேசினார். அமைச்சர் களின் புகார்களையும் கேட்டுக் கொண்டார். எனினும், “அம்ரீந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும்: என்றுஅவர் அறிவித்துள்ளார்.

                             *****************

நேரு உருவாக்கிய சொத்தை விற்க சதி!

“பொதுத் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை தனியார் முதலாளிகளிடம் விற்க ஒன்றிய அரசு சதி செய்துவருகிறது. இது நாட்டைபாதிப்புக்கு உள்ளாக் கும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்” என்றுகாங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

                             *****************

காங்கிரசும் சொத்துக்களை குத்தகைக்கு விட்டுள்ளது

நாட்டின் சொத்துக் களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு ரூ. 6 லட்சம் கோடி நிதி திரட்டும் திட்டத்தை ராகுல்காந்தி எம்.பி. கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், “காங்கிரஸ் அங்கம் வகிக்கும் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அரசு மும்பை - புனேவிரைவுச் சாலையை ரூ. 8,000 கோடிக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டியது. கடந்த 2008-இல் யுபிஏ அரசும் தில்லி ரயில் நிலையத்தை தனியாருக்கு குத்தகை விட்டு நிதி திரட்டியது; இதை ஏன் ராகுல் எதிர்க்கவில்லை?” என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

                             *****************

ஆப்கன் அச்சுறுத்தலை சமாளிக்கத் தயார்!

“ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைய உள்ளதையும், அண்டை நாடுகளில் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அதனை வேரறுப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்று முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசியுள்ளார்.

;