india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

 64 வேட்பாளர்களை அறிவித்த அகாலிதளம்

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ் சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, சிரோமணி அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியும்கூட்டணி அமைத்துள் ளன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் அகாலிதளத்திற்கு 97 இடங்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு20 இடங்கள் என தொகுதிப் பங்கீட்டு ஒப் பந்தமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 64 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை அகாலிதளம் வெளியிட்டுள்ளது.

                                    **************

‘விருப்பப்பட்டே சேர்ந்தேன்!’  பாஜக எம்எல்ஏ பல்டி!

காங்கிரசிலிருந்து விலகி வருவதற்கு, பாஜக தன்னிடம் பணபேரம் நடத்தியது என்றுகர்நாடக பாஜக எம்எல்ஏஸ்ரீமந்த் பாட்டீல் பகிரங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதன்மூலம் பாஜக-வின்மோசடி அம்பலமானதுடன், அந்தக்கட்சி செய்துவரும் ஆள்பிடி அரசியலுக்கு கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், “தான் அவ்வாறு கூறவில்லை; விருப்பப் பட்டே பாஜகவில் சேர்ந்தேன்” என்று ஸ்ரீமந்த் பாட்டீல் பல்டி அடித்துள்ளார்.

                                    **************

முதல்வர் பதவி; வருத்தம் இல்லை!

குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தபோது, அடுத்த முதல்வர் தான்தான் என்ற கனவில் இருந்தவர், துணை முதல்வர் நிதின் படேல். ஆனால், பாஜக தலைமை பூபேந்திர படேலை முதல்வராக்கி விட்டது. இதனால் நிதின் படேல் கடும் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நான் 18 வயதில் இருந்து பாஜகவில்பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்றுசமாளித்துள்ளார்.

                                    **************

பீகார் எம்.பி. மீது  வல்லுறவு வழக்கு!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் தொகுதி லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. பிரின்ஸ் ராஜ் பஸ்வான் ஆவார். இவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக பெண் ஒருவர் தில்லி காவல்துறையில் புகார் அளித் தார். பதிலுக்கு தன்னிடம் பணம் பறிக்கமுயல்வதாக பிரின்ஸ் ராஜ் பஸ்வானும், பெண் மீது புகார் அளித்தார். லோக் ஜனசக்தி பாஜக-வின் கூட்டணிக் கட்சி என்ற நிலையில், போலீசார் பிரின்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்து வந்தனர். இதனிடையே தில்லி உயர் நீதிமன்றம்தலையிட்டதைத் தொடர்ந்து, பிரின்ஸ் பஸ்வான் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                                    **************

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை!

‘தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. களத்தில் நிற்காமல் ஒருவரால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூடவெற்றிபெற முடியாதுஎன்று உறுதியாக நம்புகிறேன். மக்கள் உங்களை பார்க்க வேண்டும். ஒருவர் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றால், மக்களின் உண்மையான நன்மதிப்பை பெற வேண்டும். மக்கள்விரும்பினால் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன்’ என்று பாஜக ஆதரவுநடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

;