india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யும் ்கோவின் (COWIN), இணையதளத்தில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு கண்டனம் எழுந்தது. இந்நிலையில் அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது. பிராந்திய மொழிகளை மதிக்காத மோடி அரசின் இச்செயலை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். 

                               **************

கோவில்கள் சம்பந்தமான இந்து சமய அறநிலையத்துறையின் பழமையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

                               **************

பத்ம விருதுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிவதற்காக சிறப்புத் தேடல் குழுவை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                               **************

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை தர தனி மருத்துவமனைகள் அவசியம் என்றும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த பிறகும் நுரையீரல், இருதயம் பலவீனம் அடைந்திருக்கக்கூடும் என்று தில்லி எய்ம்ஸ்தலைவரான மருத்துவர் சந்தீப்குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                               **************

வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலத்தை வருகிற ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

                               **************

இந்திய ரயில் போக்குவரத்தை, 2030-க்குள், உலகின் மிகப் பெரிய, ‘பசுமை ரயில்வே’யாக மாற்றதிட்டமிட்டு, முழு வீச்சில் பணிகள் நடப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

                               **************

நேரடி மின் விநியோக முறை இன்ஜின் அமைப்புடன் ரயில்கள் இயக்கப்படுவதால், ஆண்டுக்கு ரூ.100 கோடி சேமிக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

                               **************

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன்முகமது ஜின்னாவை நியமித்து, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

                               **************

சென்னையில் பாரத் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஆறு காப்புரிமங்களை பெற்றுள்ளது. 

;