india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

இந்திய பயணிகள் விமானங்களு க்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

                                          ****************

ஒலியை விட 9 மடங்கு வேகமாகசெல்லக்கூடிய ‘சிர்கான்” என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகர மாக சோதனை செய்துள்ளது.

                                          ****************

சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கா லுக்கு விரைவில் பயணிகள் படகு சேவை தொடங்க இருக்கிறது. 400 கார்களையும் ஏற்றிச் செல்லும் வசதியும் உள்ளது என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.

                                          ****************

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி யுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                          ****************

அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் இணைக்கப் பட்டுள்ளதாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் தெரிவித்துள்ளார்.

                                          ****************

இந்தியா-நேபாளம் இடையிலான விமானப் போக்கு வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரை வாரத்தில் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி 6 விமானங்களை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

;