india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையின் நிறுவனரும், இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமான முத்துலட்சுமி ரெட்டியின்  136-வது பிறந்த நாள் ஜூலை 30 அன்று கொண்டாடப்பட்டது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை‍ செலுத்தியுள்ளார்.பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! . பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                                ********* 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியிலிருந்து வெள்ளியன்று நண்பகல் 11 மணி முதல் 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

                                ********* 

அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு கமாண்டர் ரிச்சர்டு டி கிளார்க், இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவானேயுடன் ஆலோசனை நடத்தினார்.

                                ********* 

ஆப்கானிஸ்தானின் அமைதிக்கான எந்தவொரு நடவடிக்கை க்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

                                ********* 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிரோன்மணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளியன்று அவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

                                ********* 

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றவுள்ள உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மைகவ் இந்தியா இணைய தளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கொள்ளப்பட்டுள்ளது.

                                ********* 

சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை யும், ஐ ஐ டி மெட்ராஸ் ஆகியவை இணைந்து கருப்பை புற்றுநோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் வகையிலான பயோமெட்ரிக் பாதுகாப்பு கருவியை உருவாக்கு வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

                                ********* 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசின் பசுமை வளாக விருது வழங்கப்பட்டுள்ளது.

                                ********* 

ஈரோட்டில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது உள்ளிட்ட 82 திட்டங்களை செயல்படுத்து வதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக மாநில வீட்டு வசதி -நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

                                ********* 

காரைக்காலுக்கும் இலங்கை காங்கேசன் து‍றைமுகத்திற்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று மக்களவையில் ஒன்றிய கப்பல் போக்குவரத்தத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.  

                                ********* 

இந்தியாவில் உள்ள 14 புலிகள் பாதுகாப்பு இடங்களுக்கு உலகளவிலான தர அங்கீகாரம் கிடைத்துள்ளது.

                                ********* 

இந்தியாவின் மதிப்புமிக்க 14 கலைப்பொருட்கள் இந்தியாவிடம் திருப்பி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

                                ********* 

மனித உரிமைகளை காப்பதில் பல்வேறு சட்டவிதிமுறைகளை மறு ஆய்வு செய்வதில்  தேசிய மனித உரிமை ஆணையம் உறுதியாக இருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.மிஸ்ரா  தெரிவித்தார்.

;