india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

மாநிலங்களுக்கு வழங்கப் படும் கோவேக்சின் தடுப்பூசிவிலையில் 200 ரூபாய் குறைத்து, ரூ.400 விலையில் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

                               ****************

ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசத்தை சீராக்கும் நெபுலைசர்கள் உள்பட கொரோனா காலத்தில் நோயாளிகளின் உயிர்காக்கும் 17 மருத்துவ சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு மருத்துவசாதனங்களை இறக்குமதி செய்ய சுங்கத்துறை ஒப்புதல் வழங்கமத்திய அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.

                               ****************

உலகின் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

                               ****************

எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

                               ****************

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4 ஆம் தேதி முதல் ஜூலை4-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

                               ****************

மோட்டார் வாகன ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

                               ****************

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லிக்கு 510 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

                               ****************

ஊரடங்கில் ரயில், விமான நிலையங்கள் வந்து, செல்ல வாகனங்களுக்கு அனுமதிரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவரவும் இறக்கிவிடவும் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

                               ****************

தேசிய பெண்கள் ஆணையம், கர்ப்பிணி பெண்களுக்காக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை(9354954224) அறிமுகப்படுத்தியுள்ளது.

                               ****************

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால்  மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமையன்று காலை  2597 கனஅடியாக அதிகரித்துள்ளது.

                               ****************

நெல்லை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.

                               ****************

தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                               ****************

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                               ****************

மத்திய நிதித்துறைச் செயலராக தமிழகத்தைச் சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் என்பவரை நியமனம் செய்து மத்தியபணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

                               ****************

தமிழக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (90) உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

                               ****************

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வியாழனன்று ஆலோசனை மேற்கொண் டார்.

                               ****************

கொரோனா தடுப்புப் பணியில் முன்னாள் ராணுவவீரர்கள் 7 ஆயிரம் பேர் பங்கேற்கஉள்ளனர். இது மற்ற பணியாளர் களுக்கு கூடுதல் தவியாக அமையும் என்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தெரிவித்துள்ளார்.

                               ****************

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்து நாடு, இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங் களை வழங்க முன்வந்துள்ளது.

;