india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஎஸ்இக்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர்தவறிவிட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

                                ***************

நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 980 டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

                                ***************

மாணவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வியைத் தொடர்வதற் கான திட்டங்களை வகுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                                ***************

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

                                ***************

பயணிகள் வரத்து குறைவால் சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் சிறப்பு ரயில் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                                ***************

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாம லேயே செல்லலாம் என இந்திய தேசியநெடுஞ்சாலை ஆணையம் தெரி வித்துள்ளது.

                                ***************

தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                ***************

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

                                ***************

ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொலைதூர மருத்துவ ஆலோசனை வசதிகளை அளிக்கும் வலைதளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

                                ***************

தேசிய மின்னணு சுகாதாரத் திட்டத்தின் வாயிலாக பல்வேறுசேவைகளைப் பெற்று மக்கள் பெரிதும் பலனடைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

;