india

img

குழந்தைகளுக்கான நிவாரணம் மோடியின் மற்றொரு மகா மோசடி... பிரசாந்த் கிஷோர் கடும் சாடல்..

புதுதில்லி:
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புதிதாக அறிவிக்கப்பட் டுள்ள திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் மற்றுமொருமகா மோசடி என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக சாடியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு- அவர்கள் 18 வயதை எட்டிய பின் மாத உதவித் தொகையும், 23 வயதை எட்டிய பின் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 10 லட்சம்ரூபாயும் வழங்கப்படும் என கடந்தசனிக்கிழமையன்று பிரதமர் மோடிஅறிவித்தார். குழந்தைகளுக்கான இலவசக் கல்வி உறுதி செய்யப் படும். அவர்களின் உயர் கல்விக்குகடன் பெற உதவி வழங்கப்படும். கடனுக்கான வட்டித் தொகை பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும். 18 வயதுவரை ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய்க்கு சுகாதார காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான பிரீமியத் தொகை பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், பிரதமரின் அறிவிப்புகளை மகா மோசடிஎன்று பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் கிஷோர், ‘மோடி சர்க்காரின் வழக்கமான மற்றொருமாஸ்டர் ஸ்ட்ரோக். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இப்போதுதான் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், அவர்கள் 18 வயதைத் தொட்டபின் உதவித் தொகை வழங்குவதாக மோடி கூறுகிறார். அதேபோல ‘அனைவருக்கும் இலவசக் கல்வி’ என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதையும் அரசே ஏற்பதாக மோடி கூறுகிறார். ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 50 கோடி இந்தியர்களுக்கு காப்பீடு சேவை வழங்கப்படுவதாக கூறப் படுகிறது. ஆனாலும், இதுவும் புதிதுபோல குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என பிரதமர் தெரிவிக்கிறார். ஆனால், இதில் குறிப்பிட வேண்டியது என்னவென் றால், தேவைப்படும் நேரத்தில் இந்த அரசால் மருத்துவப் படுக்கை மற்றும் ஆக்சிஜனை மட்டும் வழங்க முடியவில்லை’ என்று பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார்.

;