india

img

கேரளத்தை அவமதிக்கிறார் பிரதமர்... விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை (ஏபிஎம்சி) அமல்படுத்தாத கேரளா, விவசாயிகளின் போராட்டத்தை ஏன் ஆதரிக்கிறது என்ற பிரதமரின் கேள்வி கேரளத்தை அவமதிப்பதாகும்.

இது இங் குள்ள விவசாயத் துறை பற்றி பிரதமர் தெரிந்து கொள்ளாததால்தான் என்று விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார்.கேரளாவில் என்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்பது அவருக்குத் தெரியாது. இங்குள்ள விவசாய விளைபொருட்களில் சுமார் 80 சதவிகிதம் பணப்பயிர்கள். ரப்பர், காபி, தேநீர், இஞ்சி, ஏலக்காய், மிளகு மற்றும் தேங்காய் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அதன் சொந்த அமைப்பு உள்ளது. தேயிலை வாரியம் மற்றும் காபிவாரிய விதிமுறைகள் உள்ளன, அவைமத்திய அரசின் பொறுப்பாகும்.கேரளாவில், நெல், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தி செய் யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு ஒரு அமைப்பு உள்ளது. மத்திய ஆதரவு விலையை விடகேரளா ரூ.27.48, அதாவது 50 சதவீதம் அதிக விலை வழங்குகிறது. அத்தகைய ஒரு முறையான அமைப்புடன், இங்கு உற்பத்திகளுக்கு பஞ்சமில்லை. நாட்டில் முதன்முறையாக கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய வேளாண் சட்டத்தின் பாதிப்புகளில் ஒரு பகுதியாக கேரளா மிகவும் சிரமப்படப் போகிறது. நெல்கொள்முதல் மற்றும் பொது விநியோகம் இல்லாமல், ரேஷன் அமைப்பு சரிந்து, உணவுப் பாதுகாப்பு பாதிக் கப்படும். பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் இல்லாத நிலையில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும்.கேரளா ஒரு நுகர்வோர் மாநிலம்.பெரும்பான்மையான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கேரளத்தி்ற்கு வருகின்றன. அதனால்தான்கேரளாவில் விவசாயிகளும் ஜனநாயகவாதிகளும் போராட்டத்திற்கு முன்வருகின்றனர். கேரளாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நியாயமான விலை முறைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்படுகிறது. மோடியின் வார்த்தைகள் அதை உணராமல் கேரளாவையும் கேரள மக்களையும் அவமதிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

;