india

img

அரசு பங்களாவுக்காக மோதிக்கொண்ட பொக்ரியால் - ஜோதிராதித்ய சிந்தியா... ஒருவழியாக பிரச்சனையை முடித்துவைத்த மோடி அரசு...

புதுதில்லி:
காங்கிரசிலிருந்து தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, முதலில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கியபாஜக, அண்மையில் அவரை ஒன்றியஅரசின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ஆக்கியது. 

எனினும் பதவியேற்று ஒரு மாதம் ஆகியும், சிந்தியா அரசு பங்களாவில் குடியேறவில்லை. தில்லியின் அனந்தலோக் பகுதியிலுள்ள சொந்த குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்.இதற்குக் காரணம், அதிக வசதிகள் கொண்ட அரசின் ஏழாம் வகை குடியிருப்பு பங்களாவை கேட்டு- அதிலும்குறிப்பாக, ‘சப்தர்ஜங் சாலை, எண்: 27’-இல் இருக்கும் பங்களாவைக் கேட்டு ஜோதிராதித்ய சிந்தியா அடம்பிடித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. சிக்கல் என்னவென்றால், ‘எண் 27,சப்தர்ஜங் சாலை பங்களாவில், அண்மையில் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியால் வசித்து வருகிறார். ஒரு மாதம் ஆன பின்பும் விதிகளின்படி அவர் இன்னும் பங்களாவைக் காலி செய்யவில்லை. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியாவைப் பொறுத்தவரை, ‘எண் 27, சப்தர்ஜங் சாலை பங்களா’வை செண்டிமெண்ட்டாக பார்க்கிறார். நீண்டகாலமாக சிந்தியாவின் குடும்பத்தினர் வசித்து வந்த பங்களா இதுவாகும். ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தைமாதவராவ் சிந்தியா காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது இந்த பங்களாவில் 1980-இல் குடியேறினார். அவருக்குப்பின் அமைச்சரான- மகன்ஜோதிராதித்ய சிந்தியாவும் இதே பங்களாவில் தொடர்ந்தார்.

எனவே, மீண்டும் ‘எண் 27, சப்தர்ஜங் சாலைபங்களா’வில் குடியேறிவிட வேண்டும்என்பது ஜோதிராதித்ய சிந்தியாவின் திட்டம்.இந்த விஷயத்தில் பொக்ரியாலுக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மறைமுகமாக ஒரு மோதலே நடந்து வந்தது. இந்நிலையில், பிரச்சனை முற்றுவதைப் பார்த்த மோடிஅரசு, ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் விளக்கம் ஒன்றைஅளித்துள்ளது. அதில், ‘எண் 27, சப்தர்ஜங் சாலை’யிலுள்ள வகையைச் சேர்ந்த பங்களா,கேபினட் அமைச்சர்கள், மாநிலங் களவை எம்.பி.க்கள் மற்றும் முன்னாள்முதல்வர், ஆளுநர், உச்ச நீதிமன்றநீதிபதிகள் மற்றும் மக்களவையின் முன்னாள் சபாநாயகர்கள் ஆகியோருக்கு மட்டும் ஒதுக்கப்படக் கூடியதுஎன்று தெரிவித்துள்ளது. ரமேஷ் பொக்ரியால், உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர். தற் போது ஹரித்துவார் தொகுதி எம்.பி.யாகவும் இருக்கிறார். எனவே, இவற்றின் அடிப்படையில், ‘எண் 27, சப்தர்ஜங் சாலை’யிலுள்ள பங்களாவில் அவர் தொடர்கிறார் என்று தெரிவித் துள்ளது.

;