india

img

எதிர்க்கட்சிகளின் கண்டனத்தால் மன்னிப்பு கேட்டது... மோடி அரசு....

அவசர விசா வழங்கப்படும் எனவும் அறிவிப்புஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ரங்கினா கார்கர் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தன.

செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருந்தும் கார்கர் ஏன் திருப்பி அனுப்பப்பட்டார் என்பதற்கான காரணத்தை மோடி அரசு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விளக்கம் அளிப்பதற்காக, ஒன்றிய அரசு வியாழக்கிழமையன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்திலும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின.  அப்போது, “இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது” என்று கூறியுள்ள மோடி அரசு, “ரங்கினா கார்கருக்கு அவசர விசா வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது. நடந்த சம்பவத்திற்காக இந்திய அரசின் வெளியுறவு இணைச் செயலாளர் ஜே.பி.சிங், தன்னைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாக- ரங்கினா கார்கரும் இந்திய அரசின் நிலைமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.இ-விசாவுக்கு விண்ணப்பித்தால், செயல்முறை எளிதாக்கப்படும் என்று இந்திய அரசு தன்னிடம் கூறியிருப்பதாகவும், ஆனால், “என் ஒரு வயது மகளுக்கு விண்ணப்பித்து ஒருவாரம் ஆகியும் இன்னும் விசா கிடைக்கவில்லை” என்றும் கார்கர் கூறியுள்ளார்.
 

;