india

img

4 மாதத்தில் 48% அதிகரித்த பெட்ரோல் வரி வருவாய்... மக்களிடம் ரூ. 32 ஆயிரம் கோடியை பிடிங்கிய மோடி அரசு..

புதுதில்லி:
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் மூலம் ஒன்றிய பாஜகஅரசுக்கு கிடைத்துவரும் வரி வருவாய், கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கலால் வரி வாயிலாக ஒன்றியஅரசுக்குக் கிடைத்த வருவாய் விவரங்களை, தலைமை கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் (ControllerGeneral of Accounts - CGA) வெளியிட்டுள்ளார்.அதில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மட்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி வாயிலாக ஒன் றிய அரசுக்கு சுமார் ரூ. 1 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2020-21 நிதியாண்டின் இதே 4 மாதங்களில், 67 ஆயிரத்து895 கோடி ரூபாய் அளவிற்கே கலால் வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு வருவாய் கிடைத்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது 32 ஆயிரத்து 492 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. இது சுமார் 48 சதவிகித வருவாய் அதிகரிப்பாகும்.கடந்த 2020-21 நிதியாண்டு முழுமைக்குமே பெட்ரோலியப் பொருட்கள் மூலமான கலால் வரி வருவாயாக ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம்கோடி கிடைத்திருந்தது. ஆனால்,தற்போது முதல் நான்கு மாதங்களிலேயே 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதால், 2021-22 நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் (சுமார்4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்)கிடைக்கும் என்று எண்ணெய் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள் ளனர்.கடந்த 2020-ஆம் ஆண்டில் கச்சாஎண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது.அந்த நேரத்திலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறையவில்லை. மாறாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விகிதத்தை மோடி அரசு உயர்த்தியது. 

பெட்ரோல் மீதான கலால் வரியைலிட்டருக்கு 19 ரூபாய் 98 காசுகள்உயர்த்தியது. இதனால், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டர் பெட்ரோல் மீதானகலால் வரி 32 ரூபாய் 09 காசுகள் ஆனது. இதேபோல டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 31 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தியது. 2021 மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியது. மானிய விலைக்கு தருவதாக சொல்லப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 900 ரூபாயைத் தாண்டி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 17 அன்று, 875 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டது. செப்டம்பர் 1 அன்று மேலும் 25 ரூபாய் விலை உயர்த்தப்படவே, தற்போது 900 ரூபாய் 50 காசுகளாக சிலிண்டர்விலை உயர்ந்துள்ளது. நடப்பாண் டின் 6 மாதங்களில் மட்டும் சிலிண்டர்ஒன்றுக்கு 285 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் காரணமாகவே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி வருவாய் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் மோடி அரசு ரூ. 32 ஆயிரத்து 492 கோடி ரூபாயை கூடுதலாக மக்களிடம் இருந்து சுரண்டியுள்ளது. நரேந்திர மோடி அரசுஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோல்மூலமாக மட்டும் இதுவரை ரூ. 23லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து வரியாக கொள்ளை அடித் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;