india

img

பெகாசஸ் வேவுபார்ப்பு மக்களின் சுதந்திரத்திற்கே அச்சுறுத்தல்.... ஆர்எஸ்எஸ் பிரமுகர் கோவிந்தாச்சார்யா விமர்சனம்...

புதுதில்லி:
முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரமுகரான கோவிந்தாச்சார்யா கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் முகநூல், வாட்ஸ் ஆப் குழுக் களில் விவரங்கள் திருடப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என்றுகூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவர், ‘இணையதள பயங்கரவாதம்’ என்று அப்போது வர்ணித்திருந்தார்.

இதனிடையே, பெகாசஸ் வேவுமென்பொருள் மூலம் உச்ச நீதிமன்றநீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 300-க்கும்மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் அண்மையில் பூதாகரமானது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ்,ஊடகவியலாளர்கள், ‘தி இந்து’ என்.ராம், பரன்ஜாய் குஹா, வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் முன் னாள் பிரமுகர் கோவிந்தாச்சார்யா, ‘பெகாசஸ்’ வழக்குடன், தனது 2019-ஆம் ஆண்டு மனுவையும் சேர்த்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார். “பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட பிரபலங்கள் பெயர்களை அறியும் போது பொதுமக்கள் மத்தியில் தங்களின் சுதந்திரம் குறித்து கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சட்டவிரோதமான கண்காணிப்பு பொதுமக்களின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கும் மிரட்டல்விடுக்கப்படுவதாகும். மக்களின் அடிப்படை உரிமைகளே பறிக்கப்படுவது மிகவும் தவறான ஒன்றாகும். எனவே, ஒரு பாரபட்சமற்ற பொறுப்பான விசாரணை அவசியமாகும்” என்றுமனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

;