india

img

விவசாயிகளின் நாடு தழுவிய சாலைத் தடை போராட்டம்.... மாநில- தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.....

புதுதில்லி:
மோடி அரசின் கார்ப்பரேட் சார்புவிவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாய அமைப்புகள் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3மணி வரை நாடு முழுவதும் சாலையைத் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தின டிராக்டர் அணிவகுப்புக்குப் பின்னர் நாடு முழுவதும்விவசாயிகள் அமைப்புகள் நடத்திய மிகப்பெரிய எதிர்ப்பு இதுவாகும்.தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலநெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து சாலைகளை தடுப்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தன.தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் ஏராளமானோர் தங்கள்கிராமங்களுக்குத் திரும்பி சாலைத் தடையை வெற்றிகரமாகச் செய்தனர்.தில்லிக்கு செல்லும் எல்லைகளில்தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் தடுத்ததால் தலைநகருக் குள் சாலைத் தடைகள் ஏற்படவில்லை. ஆம்புலன்ஸ், பள்ளி பேருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டன. சாலைத் தடைகள் காரணமாக வாகனங்களை நிறுத்தவேண்டியவர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் மற்றும் உணவை வழங்கினர். சாலைத் தடை மாலை 3 மணிக்குமுடிவடைந்தது. துண்டிக்கப்பட்ட இணையத் தொடர்பு உடனடியாக மீட்டமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்தனர்.சாலை முற்றுகையின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை காலை 11 மணியளவில் போராட்டக்காரர்கள் அனைத்துபஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கூடி முழக்கமிட்டனர்.

பாஜகவினர் அச்சுறுத்தல்
பாஜக ஆளும் மாநிலங்களில், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துக் களை தெரிவிப்பவர்களின் பாஸ்போர்ட் டுகளை பறிமுதல் செய்வதாகவும், ஆயுத உரிமங்களை ரத்து செய்வதாகவும் உத்தர்கண்ட் அரசு தெரிவித் துள்ளது. போராட்டங்கள் மற்றும் முற்றுகைகளில் ஈடுபடுவோருக்கு வங்கி கடன்கள், அரசு வேலைகள், பாஸ்போர்ட், அரசு ஒப்பந்தங்கள், ஆயுத உரிமங்கள் மற்றும் பிற காவல்துறை சரிபார்ப்பு தேவைகள் மறுக்கப்படும் என்று பீகார் டிஜிபி கூறினார்.இதற்கிடையில், அதிகாரிகளின்தடையை மீறி பல்லாயிரக்கணக் கான மக்கள் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லியில் உள்ள மகாபஞ்சாயத் தில் இணைந்தனர். முசாபர்நகர், பாக்பத், புலந்த்ஷாஹர் மற்றும் ஜிந்த் ஆகிய மகாபஞ்சாயத்துகள் விவசாயிகளுடன் கைகோர்த்தது.

அரசுக்கு காலக்கெடு
நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.  புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்குஅக்டோபர் 2 ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ்திகாயத்  தெரிவித்துள்ளார்.புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 6 அன்று நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.ஹரியானா மாநிலம் பல்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். பஞ்சாபின் அமிர்தசரஸ், மொகாலி நகரங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். காஷ்மீரில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கர்நாடகத் தலைநகர் பெங்களூர்ஏலகங்காவில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநில விவசாயிகள்ஹரியானா மாநில எல்லையான சாஜகான்பூரில் நெடுஞ்சாலையில்   போராட் டத்தில் ஈடுபட்டனர்.கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் தமிழகத்தில் சென்னை அண்ணா சாலை உட்பட மாநிலத்தின்பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

படக்குறிப்பு : வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டத்தில் சனிக்கிழமையன்று ஹரியானா மாநிலத்தின் பல்வால் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். இங்கேதான் காவல்துறையினர் விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். இப்போது விவசாயிகள் மீண்டும் அங்கே ஆவேசமாகத் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

;