india

img

16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்....

புதுதில்லி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்றுமருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, தில்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, பீகார், ஜார்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம் ஆகிய 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளன. தமிழ்நாட்டில் இன்று முதல் 24- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

;