india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைவிட கார்ப்பரேட்டு களுக்குத்தான் அதிக நன்மைகளைவிளைவிக்கும் என்று பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசு விமர்சித்துள்ளார். வல்லுநர்களின் நியாயமான குரலை செவிமடுங்கள் பிரதமர் மோடி அவர்களே!  விவசாய சீர்திருத்தம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் விவாதியுங்கள். அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுங்கள்.

                                             ************************

மிக உயர் பதவியில் இருந்த 78 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு கூட்டறிக்கையில் வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்தை மீறியவை எனவும் அவை திரும்பப்பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். விடுதலைக்குப் பின்னர் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கை ஆற்றிய அதிகாரிகளின் குரல் கேட்கப்பட வேண்டும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் விருப்பமாகக் கொண்டு புதிய சொகுசு கட்டிடங்கள் கட்டுவதும் பொய்ப்பிரச்சாரங்கள் செய்வதன் மூலமும் விவசாயிகளின்/அனைத்து மக்களின் இந்தியாவை சிதைக்க அனுமதிக்கக்கூடாது. 

                                             ************************

இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள மக்களின் ஆரோக்கியத்துக்கும் ஏழைகளுக்கு நிதி மற்றும் உணவு தானியங்களை தருவதையும் முன்னுரிமையாக கருதாமல் பிரதமர் மோடி புதிய விமானங்களுக்கும் தனக்கென ஒரு சொகுசு வீட்டுக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் வாரியிறைத்து செலவு செய்கிறார். மிகப்பெரிய கிரிமினல் குற்றம்.

                                             ************************

கார்ட்டூன் சொல்லும் செய்தி:     

கூடுதலாக இருக்கும் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்படும்.

                                             ************************

ஜனநாயகத்தின் உயிர் மூச்சை அழித்துவிட்டு எத்தனை புதிய கட்டிடங்கள் கட்டினாலும் இந்தியாவின் மீது சுமத்தப்பட்ட இந்த மகா பாதகத்தை ஈடுகட்ட இயலாது.

                                             ************************

இந்தியாவின் எதிர்காலமான நமது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவு காரணமாக எடை குறைவாகவும் உயரம் குறைவாகவும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்களின் உடல் ஆரோக்கியத்தில் செய்யப்படவேண்டிய நிதி முதலீடை முன்னுரிமையாக கொள்ளாமல் பிரதமர் புதிய விமானங்கள்/ புதிய கட்டிடங்கள்/ தனக்கென சொகுசு வீடு உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளார். இதுதான் புதிய இந்தியாவா?

                                             ************************

நவம்பர் மாதத்தில் 35 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. 95 சதவீத குடும்பங்களுக்கு உண்மை உதயம்ஊதியம் வீழ்ச்சி அடைந்துள்ளது என சி.எம்.ஐ.ஈ. ஆய்வு கூறுகிறது.  இந்த அரசாங்கம் பொருளாதாரம் குறித்து தினசரிபொய்களை அவிழ்த்துவிடு கிறது. ஆனால்  தமது வாழ்வா தார துன்பங்களுடன் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

+++++++++++++++++++++

கூடுதல் கருத்துக்களுக்கு.... 

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;