india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தனது தொகுதியான வாரணாசிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாங்களெல்லாம் - அதாவது எதிர்க்கட்சிகளெல்லாம் பொய்கள், மேலும் பொய்கள், மேலும் மேலும் பொய்களைப் பரப்பிவருவதாக திருவாய் மலர்ந்திருக்கிறார். புதிய வேளாண் சட்டங்கள்,ஏற்கெனவே நடைமுறையில் உள்ள, விவசாயிகளுக்குச் சாதகமான கட்டமைப்பை நீக்கிவிடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அப்படியானால்அவர் ஏன், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதாரவிலையில் விற்பதற்கு உரிய உரிமையை சட்டமாக நிறைவேற்றுவதற்கு மறுக்கிறார். அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென 2017ஆம் ஆண்டிலேயே  நாங்கள் முன்மொழிந்திருந்தோமே! 

                                                      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“மக்களுக்கு ஆதரவானது” - என்று புதிய வேளாண் சட்டங்களைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். பணமதிப்பு நீக்கத்தையும், ஜிஎஸ்டி வரி விதிப்பையும் கொரோனா ஊரடங்கையும் கூட “மக்களுக்குஆதரவானது” என்றுதான் மோடி கூறினார். இவற்றின் விளைவுகள் என்ன? கொரோனா தொற்று நோய் மிகத் தீவிரமாகப் பரவியது. பொருளாதாரம்பேரழிவை எட்டியது; மக்களின் துன்பங்களும் வேலையின்மையும், பசியும், பட்டினியும், துயரங்களும் அதிகரித்ததுதான் மிச்சம். அதேபோல மக்களுக்கு ஆதரவானது என்று கூறி, மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்கள் உண்மையில் இந்திய விவசாயத்தை அழிக்கும் நோக்கம் கொண்டவை. மோடி அரசே, உடனடியாக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுக! 

                                                      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“விவசாயிகளுக்கு ஆதரவானது” - என்றும் புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி புகழ்கிறார். பிரதமர் மோடி அவர்களே, உங்களது சட்டங்கள் தங்களுக்கு ஆதரவானவை என்றால், லட்சோபலட்சம் விவசாயிகள் ஏன் கடும் குளிரிலும் கூட, அந்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள்? எங்களதுவிவசாயிகள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களுக்கும் நம் அனைவருக்கும்வயிற்றுக்குச் சோறிடும் அன்ன தாதாக்கள். அவர்களது குரலுக்கு செவி சாயுங்கள். வேளாண் சட்டங்களையும் மின்சாரச் சட்டத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி தூக்கி எறியுங்கள்.

                                                      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இன்றைக்கு இந்திய விவசாயிகள் நடத்தி வரும் மகத்தான எழுச்சி, 1980களில் நடந்த விவசாயிகளின் பேரெழுச்சியை நினைவுபடுத்துகிறது. அப்போது நடைபெற்ற விவசாயிகளின் பெரும் போராட்டம் நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தையே கொண்டு வந்தது. இன்றைக்கு புதிய தலைமுறை விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர், அடுத்த தலைமுறை இளம் விவசாயிகள், புதிய வகை கோரிக்கைகளை வடிவமைத்து போராட்டக் களத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது மோடி அரசுக்கு எதிரான மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும்.

________________________

சமூக வலைத்தளங்களில் படிக்க...  

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;