india

img

காங்கிரஸ் பெயரில் போலி ‘டூல்கிட்’ வெளியிட்டு மோசடி.... ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி உட்பட 4 பேர் மீது வழக்கு...

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், போலி ‘டூல்கிட்’வெளியிட்டு, மோசடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி உட்பட 4 பேர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலை தீவிரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் மதிப்பைக் குறைக்கவும், பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதைக்கவும், சர்வதேச ஊடகங்களுடன் கூட்டுச்சேர்ந்து காங்கிரஸ் கட்சி சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்காகதனது கட்சியினருக்கு ‘டூல்கிட்’ (வழிகாட்டுதல்) ஒன்றை தயாரித்து வழங்கி இருக்கிறது என்ற ஆர்எஸ்எஸ் - பாஜகதலைவர்கள் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தனர்.

இதுதான் காங்கிரஸ் தயாரித்துள்ள‘டூல்கிட்’ என்று கூடி, கைச்சின்னத்துடன் கூடிய ஆவணம் ஒன்றை பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா வெளியிட் டார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் அந்த ஆவணத்தை அப்படியே தங்களின் சமூகவலைதளப் பக்கங்களிலும் வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து வந்தனர்.ஆனால், இந்த ‘டூல்கிட்’ போலியானது, பாஜக தலைவர்களால் உருவாக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதற்காக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று புகாரும் அளித்தனர்.இதில், காங்கிரஸ் செயலாளர் ஜஸ்வந்த் குர்ஜார் அளித்த புகாரின் பேரில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் உள்ள பஜாஜ் நகர் காவல் நிலையத்தில், ஜே.பி. நட்டா, ஸ்மிருதி இரானி,பி.எல்.சந்தோஷ், சம்பித் பத்ரா ஆகியோர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

;