india

img

மகாராஷ்டிரா விவசாயிகள் தில்லி எல்லையை வந்தடைந்தனர்

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புறப்பட்டவிவசாயிகள் தில்லியின் எல்லையில், ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாஜஹான்பூர் வந்துசேர்ந்தார்கள். அங்கே நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிராவிலிருந்து ஷாஜகான்பூருக்கு வந்து சேர்ந்த விவசாயிகளுடன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜுகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்ட விவசாயிகளின் வாகனப்பேரணியும் வந்து சங்கமித்தது. ஷாஜகான்பூர் அருகில் உள்ள நிம்ரானா சுங்கச்சாவடியை பேரெழுச்சிமிக்க முழக்கங்களுடன் இந்தப் பேரணி கடந்து சென்றது. ஷாஜகான்பூரில் சங்கமித்த விவசாயிகளிடையே அசோக்தாவ்லே, ஹன்னன்முல்லா, கிருஷ்ணபிரசாத், அம்ராராம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். அப்போது, வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய முடியாது எனபிடிவாதமாக மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் கண்டனம்தெரிவித்த அவர்கள், இச்சட்டங் களை ரத்து செய்யும் வரை போராட்டம்ஓயாது என அறிவித்தனர்.இப்போராட்டத்தால் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. காவல்துறையினர் போக்குவரத்தை வேறு பாதைகளில் திருப்பிவிட்டனர்.

இவர்களுடன் ராஜஸ்தானிலிருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவரும், மக்களுவை உறுப்பினருமான ஹனுமான் பெனிவால் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இணைந்து கொண்டனர்.ஹனுமான் பெனிவாலின் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி இதுநாள்வரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்தது. அக்கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, விவசாயிகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள் ளது. (ந.நி.)

;