india

img

கார்ப்பரேட்டுக்கு ஆதரவானதே அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்..... ஆர்எஸ்எஸ்-ஸின் துணை அமைப்பு ஒப்புதல் வாக்குமூலம்... தாங்களும் எதிர்ப்பதாக தீர்மானம்

புதுதில்லி:
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான வேளாண் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், கார்ப்பரேட் சுரண்டலுக்கும், பதுக்கலுக்கும் துணைபோவதாக உள்ளன. ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரான் மஞ்ச் (Swadeshi Jagran Manch - SJM)ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்வதேசி ஜாக்ரான் மஞ்ச் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, அதன் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம், சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்படும் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிவிடும். இதனால் ஏற்றுமதியாளர்கள், சூப்பர் மார்க்கெட் முதலாளிகள், மிகப்பெரிய மொத்த விற்பனையாளர்கள் பதுக்கல் வேலையில் ஈடுபடுவார்கள். தற்போது சில்லரை வர்த்தகத்தில் 38 சதவிகிதம் ரிலையன்ஸிடம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வளர்ச்சி என்பது சந்தையில் ஏகபோகம் என்ற நிலையை ஏற்படுத்தி, விவசாயிகள், சப்ளை செய்பவர்களை சுரண்டும் நிலைக்குதள்ளும். அதேபோல, வேளாண் சாகுபடி விற்பனை சந்தைக்கு (Agricultural Produce Market Committee -APMC) வெளியே கொள்முதலை அனுமதிப்பது, பெருநிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்டுவதற்கே உதவி செய்யும். ஆதலால், ஏபிஎம்சி சந்தைக்கு வெளியே கொள்முதல் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்வதை சட்டவிரோதம் என்று அறிவித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு கூறியுள்ளது.

;