india

img

சீர்திருத்தத்திற்கு உதவாது.... பொருளாதார வல்லுநர்கள் கருத்து....

புதுதில்லி:
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு பொருளாதார வல்லுநர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:வேளாண் சந்தைப்படுத் தல் முறையில் மாற்றமும்மேம்பாடும் தேவைப்படுகிறது என வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்கள்நிச்சயம் அந்த மாற்றத்தைசெய்யாது. இந்திய வேளாண்கொள்கைகளை ஆராய்ந்த வல்லுநர்கள், உரிய விலைகிடைக்கவில்லை, ஒழுங்குமுறை சந்தைகளில் நாங்கள் விரும்பிய வகையில் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை என்றவிவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தவறான அனுமானங்களின் மூலமே இந்தபுதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 

இந்த வேளாண் சட்டங் களின் முக்கிய நோக்கம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நடுவே ஒழுங் கற்ற விற்பனையை அனுமதிப்பது மட்டுமின்றி, வித்தியாசமான சட்டங்கள், வித்தியாசமான சந்தை விலை மற்றும் வெவ்வேறு விதிமுறைகளும் அடங்கும். இந்தசட்டங்கள் ஒழுங்குமுறை சந்தையிலிருந்து வெளியேறி, ஒழுங்கற்ற சந்தை பகுதிக் குள் நுழைய ஏற்கனவே காரணமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியர் டி.நரசிம்ம ரெட்டி, இந்தியபொது நிர்வாக நிறுவனத்தின்ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியர் கமல்நயன் கப்ரா உட்பட பல வல்லுநர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த புதிய வேளாண் சட்டத்தில் உள்ள ஒப்பந்த விவசாய ஏற்பாடுகள், போதியபாதுகாப்பை வழங்குவதில் சிறு விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே மிகப்பெரிய அளவில் சமநிலையின்மையை உருவாக் கும் என அவர்கள் தெரிவித் துள்ளனர்.

;