india

img

பாஜக ஆளும் மாநிலங்களில் குறையும் கால்நடைகள் எண்ணிக்கை.... பசுவதை தடைச் சட்டம் கடுமையாக இல்லாத மாநிலங்களில் மாடுகள் வளர்ப்பு அதிகரிப்பு.....

புதுதில்லி:
பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்று கூறி, பாஜக ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய சட்டங்களைப் போட்டுவருகின்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில்தான் பசு, கன்று, காளை, எருது உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே போவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

2014-ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டன. மாட்டிறைச்சி வைத்திருப்போரை பாஜக-வைச் சேர்ந்த
வர்கள் நேரடியாகவே அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அரங்கேறத் துவங்கின.இதற்கு முதன்முதலில் வழிகாட்டிய மாநிலங்களில் குஜராத் முக்கியமானது. இங்கு 2011-ஆம் ஆண்டு நரேந்திர மோடிகுஜராத் முதல்வராக இருந்தபோது, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தினார். அதாவது, குஜராத்தில் மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பதுடன், மாட்டிறைச்சியை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாற்றினார்.

அதைத்தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு, அன்றைய மகாராஷ்டிரா மாநில பாஜக - சிவசேனா கூட்டணி அரசும், விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது.  இந்த திருத்தமானது, பசுக்களை மட்டுமல்ல, காளை மற்றும் எருதுகளை வதை செய்தாலும் சிறைத்தண்டனை என்று கூறியதுடன், 6 மாதம் என்ற அளவில் இருந்த சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளாகவும் அதிகரித்தது.இதேபோன்று, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, சத்தீஸ்கர் என பாஜக ஆளும் ஏனைய மாநிலங்களிலும் பசுவதைத் தடைச் சட்டம் கடுமையாக்கப்பட்டது.இந்தப் பட்டியலில் கடைசியாக சேர்ந்தமாநிலம் கர்நாடகம். ஆனால், பிற மாநிலங்களின் சட்டங்களைக் காட்டிலும் தீவிரமான ஒருசட்டமாக எடியூரப்பா அரசின் சட்டம் அமைந்தது. அதாவது, பசு, கன்று, காளை, எருதுகளை கொல்வதற்கு மட்டுமே பிற மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில், முதன்முறையாக எருமைகளையும் இந்தப் பட்டியலில் கர்நாடக பாஜக அரசு சேர்த்தது.அத்துடன், கால்நடைகளை வதைப்போர் பிடியாணை இன்றி கைது செய்யப்படு வார்கள் என்றதுடன், அவர்கள், 3 ஆண்டு காலம்முதல் 7 ஆண்டு வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சட்டத்தை திருத்தியது.

இந்நிலையில்தான், எங்கெல்லாம் கால்நடைப் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலங்களில் குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதும்,மாறாக, பசுவதைத் தடை கடுமையாக்கப் படாத மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரம் கால்நடைகள் இருந்த நிலையில், பசுவதைத் தடைச் சட்டங்கள் கொண்டுவந்த பிறகு, 2019-இல் இந்த எண்ணிக்கை 1 கோடியே90 லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகளாக குறைந்துள்ளது.மகாராஷ்டிராவில் 1 கோடியே 54 லட்சத்து84 ஆயிரம் கால்நடைகள் இருந்த நிலையில்,
2019-இல் அது 1 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளாக குறைந்துள்ளது.இதேபோல, குஜராத்தில் 2012-ஆம் ஆண்டு 99 லட்சத்து 84 ஆயிரமாக இருந்தகால்நடைகள் 96 லட்சத்து 34 ஆயிரமாகவும், மத்தியப்பிரதேசத்தில் 1 கோடியே 96 லட்சத்து 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 51 ஆயிரமாகவும் குறைந்துள்ளன.

அதேநேரம், பசுவதைக்கு கடுமையான தடைச் சட்டங்கள் இல்லாத தமிழ்நாட்டில், 88 லட்சத்து 14 ஆயிரமாக கால்நடைகளின் எண்ணிக்கை 7 ஆண்டுகளில் 95 லட்சத்து 19 ஆயிரம் கால்நடைகளாக அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் 1 கோடியே 65 லட்சத்து14 ஆயிரமாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 90 லட்சத்து 78 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாட்டிறைச்சியை முக்கிய உணவாக கொண்டிருக்கும் கேரள மாநிலத்தில் கூட, 2012-இல்13 லட்சத்து 29 ஆயிரமாக இருந்த கால்நடை களின் எண்ணிக்கை 13 லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சட்டங்கள் போட்டு பசுக்களையோ, கால்நடைகளையோ பாதுகாக்க முடியாது. கால்நடைகளுக்கான தேவையையும், அதன்மூலமான வருவாயையும் அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன.

;