india

img

டிச.8 விவசாயிகளின் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் ஆதரவு... நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக விவசாயிகள்டிசம்பர் 8 ஆம் தேதி பாரத் பந்த்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர். இந்த பந்த்திற்கு காங்கிரஸ்,தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் ஹேரா ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிசம்பர்8 ஆம் தேதி நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் ஆதரவு தெரிவி்க்கிறது. அன்றைய தினம் நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநிலதலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், போராட்டம் வெற்றிகரமாக நடத்த உறுதி செய்வார்கள். அரசுக்கும், கார்ப்பரேட்நண்பர்களுக்கும் இடையிலான சதித்திட்டத்தில் விவசாயிகள் பலியாவதைப் பார்த்து வருகிறோம். இதை விவசாயிகளும் உணர்கிறார்கள் என்று தெரிவித்தார்.தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்தலைவருமான சந்திரசேகர ராவ் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்குஎதிரானது எனக் கூறி நாடாளுமன்றத்தி லேயே டிஆர்எஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. வேளாண் சட்டங்களை மத்தியஅரசு திரும்பப் பெறும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது அவசியம்.ஆதலால் டிஆர்எஸ் கட்சியினர் அனைவரும் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;