india

img

கோவிட் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்தது....

புதுதில்லி:
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் ஒரே நாளில் 31,14,696 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. திங்களன்று காலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 63,43,81,358 முகாம்களில் 68,14,305 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தொடர்ந்து 64 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. ஒரே நாளில் 42,909 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ள னர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,76,324. ஆக உள்ளது. வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 66 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.41 சதவீதம் என்ற அளவிலும், தினசரி தொற்று உறுதி விகிதம் 3.02 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 34 நாட்களாக அன்றாடத் தொற்று உறுதி விகிதம் 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 84 நாட்களாக 5 சதவீதத்திற் கும் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

;