india

img

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படும் முன் கலந்தாலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை.... தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிச்சத்திற்கு வந்தது....

புதுதில்லி:
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்குமுன், பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசனைகள் நடைபெற்றதாக, மத்திய அரசுகூறிவருவதைப் பொய்ப்பிக்கும் விதத்தில், அவ்வாறு “கலந்தாலோசனைகள் நடைபெற்றதற்கான பதிவுருக்கள் எதுவும் இல்லை”என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, மத்திய வேளாண் அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன் அவை தொடர்பாக மிகவும் விரிவான அளவில் கலந்தாலோசனைகள் நடைபெற்றதாக திரும்பத்திரும்ப கூறி வருகிறார். மேலும் மத்திய அரசு தற்போதுஉச்சநீதிமன்றத்தில் கலந்தா லோசனைகள் நடைபெறவில்லை என்று கூறுவது “பிழையான கருத்து” (“erroneous notion”) என்று உறுதிவாக்குமூலம் ஒன்றும் தாக்கல் செய்திருக்கிறது.

எனினும், அஞ்சலி பரத்வாஜ்என்னும் சமூக செயற்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்கீழ் டிசம்பர் மாதத்தில் அவ்வாறுகலந்தாலோசனைகள் நடைபெற்ற தற்கான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய வேளாண் அமைச்சகத்தைக் கேட்டிருந்தார். கலந்தாலோசனை நடைபெற்ற விவரங்களை அவை நடைபெற்ற கூட்டங்கள், கூட்டங்களில் கலந்துகொண்டவர்களின் விவரங்கள்மற்றும் தேதிகள், அக்கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல் நகல்கள், கலந்து கொண்ட மாநிலங்களின் பட்டி
யல்கள், வல்லுநர்களின் பெயர்கள் மற்றும் விவசாயக் குழுக்களின் பெயர்கள் முதலானவைகளைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தார். மேலும் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசாங்கங்கள் அனுப்பியிருந்த விமர்சனங்களின் நகல்களையும் தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தார்.

மேலும், இந்தச் சட்டங்கள் தொடர்பாக அவற்றின் வரைவு சட்டமுன்வடிவுகளை  30 நாட்களுக்கு முன் பொது வெளியில் வெளியிடவேண்டும். அதன் விவரங்களை யும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மற்றுமொரு விண்ணப்பத்தின்கீழ், கோரப்பட்டி ருந்தது.இதுதொடர்பாக மத்திய பொதுதகவல் அதிகாரிகளுக்கு விவரங்களை அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஒரு பிரிவு, இது தொடர்பாக எவ்விதமான பதிவேடுகளும் தங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் நிர்வாகப் பிரிவு, கோரப்பட்டிருக்கும் விவரங்கள் தொடர்பாக தகவல் எதுவும் “இல்லை” என்று ஜனவரி 6 அன்று கூறியிருக்கிறது.  (ந.நி.)

;