india

img

எழுத்தாளர்கள் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணியின் படைப்புகள்.... தில்லி பல்கலை.பாடத்திலிருந்து நீக்கம் சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் - மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்....

மதுரை;
தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர் களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி மற்றும் மேற்குவங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.இதற்குஎழுத்தாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக தேர்வுக் குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில துறையைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்பு கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இந்த மூன்று எழுத்தாளர்களின் படைப்புகள்  மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று  தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில், தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து  மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணிஆகியோரின் படைப்புகள் நீக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தமுஎகச கண்டனம்
 இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து  எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது  என்ற தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடர வேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

;