india

img

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக... பிரதமருக்கு மாதர் சங்கங்கள் கடிதம்

புதுதில்லி:
போராடும் விவசாயிகளுக்கு எதிராக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இரக்கமற்ற தன்மையினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுதல் உட்பட விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு மாதர் சங்கங்கள் இணைந்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் சங்கம், பிரகதிசீல் மகிளா சங்காதன், அகில இந்திய மகிளா சன்ஸ்கிரிதிக் சங்காதன் மற்றும் அகில இந்திய அக்ரகாமி மகிளா சமிதி ஆகிய மாதர் அமைப்புகள் இணைந்து பிரதமருக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியிருக்கின்றன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உங்கள் கொள்கைகளின் கடும் பாதிப்புகள்குறித்தும், கிராமப்புறப் பெண்களைக் கடுமையாகப் பாதிக்கும் சமீபத்திய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் தேசிய அளவில் இயங்கும்மாதர் அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம். பெண்கள், விவசாயிகள் என்று அங்கீகரிக்கப்படவில்லை என்ற போதிலும், விவசாயப் பணிகளில் ஆண்களுக்கு இணையாக வேலை செய்து வருபவர்கள். விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. விவசாயத் தொழிலாளர்களில் 33 சதவீதமும், சுய வேலைவாய்ப்பு விவசாயிகளில் 48 சதவீதமும் பெண்களாவர்.

விவசாய நெருக்கடியாலும், கொரோனாவைரஸ் தொற்றைத் திட்டமிடாதவிதத்திலும், கொடூரமான நடவடிக்கைகள் மூலமாகவும் உங்கள் அரசு கையாண்ட விதமும் விவசாயி களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. இவற்றின் விளைவாக விவசாயத்தையே நம்பி வாழும் குடும்பங்கள் கடும் கடன்வலைக்குள் சிக்கிக்கொண்டுள்ளன. இதன் விளைவாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் இல்லை. இத்துடன் நாளும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வும், வேலையின்மையும், பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமையும் பெண்களின் வாழ்க்கையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன.  

அரசாங்கம் அக்டோபர் 20 அன்று நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுதும் விவசாயிகள் கிளர்ந்தெ ழுந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெண் விவசாயிகளும் மிகப் பெரியஅளவில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் புதிய வேளாண் சட்டங்கள்விவசாயக் குடும்பங்களை, வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருணைக்குத் தள்ளியிருக்கிறது. புதிய வேளாண் சட்டங்கள் ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதால், இவை விவசாயிகளின் கணிசமான பகுதியினரை நிலமற்றவர்களாக மாற்றி, வறிய நிலைக்குத் தள்ளிவிடும். இந்தச்சட்டங்கள் பெண்களை மேலும் வறிய நிலைக்கு இட்டுச்சென்றிடும். கார்ப்பரேட்டுகளின் சூறையாடலிலிருந்து விவசாயிகளையும் பெண் விவசாயிகளையும் பாதுகாத்திட எவ்வித வாய்ப்பும் கிடையாது. இந்தச் சட்டங்கள் காரணமாக அரசாங்கம் விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதைக் குறைத்துவிடும். இதனால் பொது விநியோக முறை கைவிடப்படும்.விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும்;

இந்த நிலையில், இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடும் விவசாயிகள் போராட்டத்தின் மீது உங்கள் அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். தில்லியைநோக்கி அணிவகுத்துவரும் விவசாயிகள் மீது உங்கள் அரசாங்கங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காட்டுமிராண்டித் தனமான முறையில் அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளன.போராடும் விவசாயிகளுக்கு எங்கள்ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள் கிறோம். உங்களின் தலைமையின்கீழ் மத்திய அரசாங்கம் போராடும் விவசாயிகள் மீது மிகவும் இரக்கமற்ற தன்மையுடன் நடந்துகொண்டிருப்பதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறோம்.  இவ்வாறு மாதர் சங்கங்கள் எழுதியுள்ளன.(ந.நி.)

;