தென் மத்திய ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவின் கீழ் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
நிர்வாகம் : தென் மத்திய ரயில்வே
மொத்த காலியிடங்கள்: 21
பணி : விளையாட்டுப் பிரிவு குரூப் 'சி'
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200
தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதனை படைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500. எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் கள் விளையாட்டு சோதனைகள், விளையாட்டு சாதனைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022
மேலும் விவரங்களை அறிய www.scr.indianrailways.gov.in அல்லது https://www.ifinish.in/rrc_scr_sports/pdfs/sports.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.