india

img

மக்கள் மீது அதிகரிக்கும் சுமை சமையல் சிலிண்டரின் விலை உயர்வு...

சென்னை:
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைரூ.50 அதிகரித்து ரூ.660ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் மக்கள்மீது அடுத்த இடியாக  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.   நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப ஒவ்வொருமாதமும் 1 ஆம் தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து அமையும்.தற்போது டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.(மானியம் இல்லாதது). தற்போது ரூ.610-க்கு விற்பனையாகும் சிலிண்டர் இனி,660 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.56.50 உயர்ந்துள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1410.10-க்கு விற்பனையாகிறது.  

;