india

img

பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காதாம்... கேரளா பாஜக தலைவர் ‘கண்டுபிடிப்பு’

திருவனந்தபுரம்:
பெட்ரோல்  டீசல் விலை உயர்வுபொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கேரளா பாஜகதலைவர் சுரேந்திரன் ‘கண்டுபிடித்து’க் கூறியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைக் காரணம்காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல்டீசல் விலை உயர்வின் மூலம் அத்தியாவசியப்பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பாஜகமோடியின் ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை பலமுறை அதிகரித்துள்ளது. விலையை குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை மோடி அரசு கண்டுகொள்ளவேயில்லை.

இந்நிலையில் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் , பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ‘கண்டுபிடித்து’க் கூறியுள்ளார். மக்கள் யாரும் இந்தவிலை உயர்வை பற்றி கவலைப்படுவதில்லை. பெட்ரோல் மற்றும் டீசல்விலை உயர்வு தேர்தலில் எதிரொலிக்காது என்று  சுரேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.விலை உயர்வால் மக்கள் படுகின்றசிரமத்தை பாஜக தலைவர்கள்எந்தளவிற்கு அலட்சியப்படுத்து கின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும் என்று அரசியல் கட்சியினர்  விமர்சித்துள்ளனர்.

;