india

img

இந்தியாவில் பரவிய ஒமிக்ரான் தொற்று – 2 பேர் பாதிப்பு  

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒமிக்ரான் தொற்று பல நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால்  தெரிவித்துள்ளார். இதில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயது, மற்றொருவருக்கு 46 வயது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள 2 பேரின் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஒமைக்ரான் தொற்று, டெல்டா கொரோனா வகையைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என ஒன்றிய அரசு தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;