india

img

செப்.8-இல் மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டமாம்.... ஆர்எஸ்எஸ் விவசாயிகள் பிரிவு நாடகம்...

பல்லியா:
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஸின் விவசாயிகள் பிரிவானபாரதிய கிசான் சங்கம் (BKS)கோரிக்கை விடுத்துள்ளது.தங்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்குவதாகவும், இல்லாவிட்டால் செப்டம்பர் 8 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பிகேஎஸ் கூறியுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா-வில் பிகேஎஸ் சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மூன்று புதியவேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண் டும். சிக்கல்களை கையாள ஒரு குழுவை அமைக்க வேண்டும். வேளாண் விற்பனை மண்டிக்கு உள்ளேயும்வெளியேயும் விவசாயிகளிடமிருந்து வாங்குவோருக்கு வங்கி உத்தரவாதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விவசாயிகளின் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை. எனவே,வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு சட்டம்இயற்ற வேண்டும் ஆகியகோரிக்கைகளை முன்வைத்தேபோராட்டம் அறிவித்துள் ளோம்” என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மோடி அரசை வழிநடத்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்புதான் எனும்போது எதற்காக இந்தப் போராட்ட நாடகம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மோடி அரசைஆர்எஸ்எஸ் வழிநடத்தவில்லை என்றும், மோடி அரசு,வாஜ்பாய் அரசு என சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்தஅனைத்து ஒன்றிய அரசுகளுமே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதுதான் தங்களின் குற்றச்சாட்டு என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். உற் பத்திக்கான செலவின் அடிப்படையிலேயே, விவசாயிகளுக்கு ஊதிய விலைகொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;