india

img

கல்யாண் சிங் அஞ்சலி நிகழ்ச்சியில் தேசியக் கொடிக்கு அவமதிப்பு.... பாஜகவினருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்....

லக்னோ:
கல்யாண் சிங்கிற்கான அஞ்சலிநிகழ்ச்சியின் போது, தேசியக் கொடிஅவமதிக்கப்பட்ட விவகாரம் சர்ச் சையைக் கிளப்பியுள்ளது.பாஜக மூத்தத் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான பி.கல்யாண் சிங் (89) சனிக்கிழமையன்று இரவு காலமானார். கல்யாண் சிங், மாநில முதல்வராகவும், ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பதால், அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலிசெலுத்தினர்.

இதனிடையே, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அஞ்சலி செலுத்த வந்தபோது, கல்யாண் சிங் உடலின் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடியை மறைத்து பாஜக கொடி போர்த்தப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.நாட்டின் தேசியக் கொடியைவிட, பாஜகவின் கொடி உயர்வானதா? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசியக் கொடி யை பாஜகவினர் அவமதித்து விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.“நவீன இந்தியாவில் தேசியக்கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா?” என்று இளைஞர்காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவிவாஸ் பிவிகேள்வி எழுப்பியுள்ளார். 

“தேசத்திற்கு மேலே கட்சி... மூவர்ணக் கொடிக்கு மேலே கட்சிகொடி... வழக்கம்போல பாஜக!; மனந்திருந்துதல் இல்லை, வருத்தமில்லை, வருத்தமில்லை!” என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யம் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.கல்யாண் சிங் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோதுதான் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அப்போதே இந்தியதேசமும், நாட்டின் தேசியக்கொடியும் அவமதிக்கப்பட்டது. தற்போது கல்யாண் சிங் மரணத்திலும் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டு உள் ளது. இதில் அதிர்ச்சிகொள்ள எதுவும் இல்லை என்றும் சிலர் சமூகவலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
 

;