tamilnadu

சாத்தான்குளம் சம்பவத்தில் தண்டிக்கப்பட்ட டிஎஸ்பிக்கு புதுக்கோட்டையில் பணி வழங்குவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுக்கோட்டை, ஜூலை 2- சாத்தான்குளம் கைதிகள் மரணம் தொ டர்பான வழக்கில் காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப்பட்ட காவல்துணைக் கண்கா ணிப்பாளருக்கு புதுக்கோட்டையில் பணி வழ ங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவல கத்தில் எதிர்க்கட்சிகளின் மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ரகுபதி எம்எல்ஏ தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சி.அன்புமணவாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மிருகத்தனமான முறை யில் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவத்தில் மதுரை உயர்நீ திமன்றக் கிளை தாமாக முன்வந்து வழக்குப்ப திவு செய்ததோடு, நீதித்துறை நடுவரை விசார ணைக்கு உத்தரவிட்டது.

விசாரணைக்குச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர்  பாரதிதாசனை கூடுதல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் டி.குமார், துணைக் கண்கா ணிப்பாளர் சி.பிரதாபன் உள்ளிட்ட அதிகா ரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காததோடு, சாத்தான்குளம் போலீசாரை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டதால் இருவ ரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்ப ட்டனர். மேலும், நீதிபதியை ஒருமையில் பேசி மிரட்டிய காவலர் மகாராஜன் தற்காலிக பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், மாவட்ட கூடுதல் கண்கா ணிப்பாளர் டி.குமார் நீலகிரி மாவட்டத்திற்கும், டிஎஸ்பி சி.பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புகாவல் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை யின் இந்த நடவடிக்கை கடும் கண்ட னத்திற்கு உரியது. எனவே, மேற்படி வழக்கு  முடியும் வரை காத்திருப்போர் பட்டியலில்  வைக்கப்பட்ட இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் புதுக்கோட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக எதிர்கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து புதுக்கோட்டையில் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;