india

img

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை; ரேசன் கிடையாது.... சாமியார் ஆட்சி நடத்தும் உ.பி.யில் புதிய சட்டம்?

லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் இனிமேல் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் அரசு வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாது, ரேசன் உள்ளிட்ட சலுகைகளைப் பெற முடியாது என்று புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

சாமியார் முதல்வரான ஆதித்யநாத் தலைமையில் இயங்கும் மாநில நீதி ஆணையம், 2021-30 வரையிலான அடுத்த 10 ஆண்டுகளுக்கு உருவாக்கியுள்ள ‘புதிய மக்கள் தொகைக் கொள்கையில்’ (New Population Policy 2021-30) இந்த அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.பாஜக அரசின் இப்புதிய சட்டத்தில் 2 குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையும், 2 குழந்தைகளுக்கு அதிகமாக வைத்துள்ள பெற்றோர்களுக்கு கூடுதல் வரி அல்லது சலுகைகள் குறைப்பும் (Disincentives) இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

2 குழந்தைகள் மட்டுமே உள்ள பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்பதை முழுமையாகத் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் 2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள பெற்றோர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 2 குழந்தைகள் கட்டுப்பாட்டை மீறியவர்கள் 1. மாநில அரசின் நலத் திட்டங்களைப் பெற முடியாது; 2. அவர்களுக்கு ரேசனில் 4 பேருக்கான பொ
ருட்கள் மட்டுமே வழங்கப்படும் 3. உள்ளூர் தேர்தலில் போட்டியிட முடியாது; 4. அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாது 5. அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மறுபுறத்தில் இரண்டு அல்லது ஒரு குழந்தை பெற்ற பின்பு தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு 1. அடிப்படை சேவைகளின் (Utilities) கட்டணத்தில் சலுகை 2. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஒரே குழந்தைக்குப் பின், தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு உள்ள சலுகைகளுடன் கூடுதலாக 1. கல்லூரிப் படிப்பு வரையில் இலவச கல்வி 2. அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பள உயர்வு 3. என்பிஎஸ் (NPS) திட்டத்தில் 3 சதவிகிதம் கூடுதல் தொகை 4. வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழுள்ள தம்பதிகளுக்கு ஒரு முறை சலுகையாக ஆண் குழந்தைக்கு 80 ஆயிரம் ரூபாயும், பெண் குழந்தைக்கு 1 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

;