india

img

மதமாற்றத் தடைச் சட்டம் பெயரில், கைது... சிறை என மிரட்டும் ஆதித்யநாத் அரசு.... உ.பி.யை விட்டு அகதிகளாக வெளியேறும் காதல் திருமண தம்பதிகள்...

லக்னோ:
உத்தரப்பிரதேச பாஜக அரசு, மதம்மாற்றத் தடை அவசரச் சட்டம் (Prohibition of Unlawful Conversion of Religion Ordinance, 2020) ஒன்றை அண்மையில் கொண்டு வந்தது.கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

பொதுவாக கட்டாய மதமாற்றத் திற்குத் தான் தடை; அதற்குத்தான் புதிய சட்டம் என்று கூறப்பட்டாலும், உள்ளார்ந்த வகையில், மதம்கடந்த காதல் திருமணங்களைத் தடுக்கும் வகையில்- குறிப்பாக சொன்னால் இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்வதைத் தடுப்பதற்காகவே, ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.அதற்கேற்பவே, இந்தச் சட்டம் அமலுக்கு வந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே 8 காதல் திருமணத் தம்பதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் மனப்பூர்வமாகத்தான் திருமணம் செய்தோம், யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று தம்பதிகள் கூறினாலும், அவற் றைக் காவல்துறை கேட்பதில்லை. வேற்று மதத்தவரை திருமணம் செய்தவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தண்டனை உறுதி என்பது போலவும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தவர் களை விட்டுவிடாமல் அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு பயமுறுத்தத் துவங்கியுள்ளனர்.இதனால் அச்சமடைந்த சிலர்,தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றங்களை நாடிக் கொண்டிருக்கும் நிலையில், பலர், ஆதித்யநாத் அரசின் கைது, சிறை நடவடிக்கைகளுக்கு அஞ்சி, உ.பி. மாநிலத்தை விட்டு வெளியேறத் துவங்கியிருப்பது தெரிய வந் துள்ளது.இவர்களில், வாரணாசி அருகே வசித்து வந்த ஸ்மிருதி (26)யும் ஒருவராவார். இவர், முகமது இக்பால் என்றமுஸ்லிம் இளைஞரை கடந்த 4 ஆண்டு
களாக காதலித்து வந்தார். இதற்குஸ்மிருதியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து அவரை கொடுமைப்படுத்திய நிலையில்- புதிதாக வந்த சட்டமும் தங்களுக்கு எதிராக அமைந்திருப்பதால், தற்போது ஸ்மிருதியும் இக்பாலும் தில்லிக்குச் தப்பிச் சென்று வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விண்ணப் பித்துள்ளனர்.

உ.பி.யைச் சேர்ந்த முகமது ஷடாப் என்ற முஸ்லிம் இளைஞர், அனாமிகா என்ற இந்து பெண்ணை காதலித்து வரும் நிலையில், அவர் மீது, புதிய சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் அளிப்போம் என்று பெண்வீட்டார் மிரட்டியுள்ளனர். இதனால், உ.பி.யை விட்டுவெளியேறி திருமணம் செய்து கொள் வோம் என்றும் தேவைப்பட்டால் நான் இந்து மதத்துக்கு மாறுவேன் என்றும் முகமது ஷடாப் தெரிவித்துள்ளார்.ஆனால், வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்று திருமணம் செய்து கொண்டாலும், அவர்களை கைது செய்யாமல் விடமாட்டோம் என்று உ.பி.பாஜக அரசின் காவல்துறை மிரட்டியுள்ளது.அலிகர் குற்றப்பிரிவு எஸ்.பி. அரவிந்த் குமார் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ‘‘திருமணம் செய்துகொள்வதற்காக கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் மதமாற்றத் தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் கள். வெளிமாநிலங்களுக்குச் சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில், இந்துஇளம்பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதுமட்டுமே கடும் நெருக்கடிக்கு உள்ளாக் கப்படுகிறது. இந்து இளைஞர்கள், முஸ்லிம் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு அவ்வளவு கெடுபிடி இல்லை. மாறாக, இந்து அமைப்புக்களும், காவல்துறையும் ஆதரவாக இருக்கின்றனர் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டம் ஹபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், இந்து மதத்தைச் சேர்ந்த நபரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில், மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். இதேபோல பஹேதி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ணும் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இவரும் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். இவ்விரு திருமணங்களுக்கும் பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு எழுந்தாலும், இந்த இரு காதல் தம்பதிகளுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளது.

;