india

img

சீன நிதியில் இயங்கும் பிஎம் கேர்ஸ் மீது என்ன நடவடிக்கை? பிரசாந்த் பூஷன் கேள்வி

சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிஎம் கேர்ஸ்-ஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் பத்திரிகைகள் மீது மோடி அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஒன்றிய அரசு மீது விமர்சனங்களை வைக்கும் அச்சு மற்றும் இணையதள ஊடகங்களை மிரட்டும் விதவாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றை ஏவி சோதனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

ஏற்கனவே, நியூஸ் லாண்டரி, தி வயர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீது மோடி ஆர்ச்ய் ரெய்டு நடத்தியது. குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைவெளியிட்டதற்காக சர்வதேச செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி மீதும் வருமான வரித்துறையை ஏவி மோடி அரசு சோதனை நடத்தியது.

இந்தப் பிண்ணியிலேயே, இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் மீதும், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாகக் குற்றமசாட்டி, 2021 செப்டம்பர் மாதத்தில் அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய அரசு சோதனை நடத்தியது.

நியூஸ் க்ளிக் நிறுவனத்துக்குச் சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று அமெரிக்க ஊடகமான தி நியூ யார்க் டைம்ஸ் பொய்ச் செய்தி வெளியிட்டது.

சீனாவில் தொழில் நடத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த நெவில் சிங்கத்துக்கும் நியூஸ் கிளிக் ஊடகத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் பரப்பி வந்தது.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே நியூஸ் கிளிக்கின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மறுப்பு தெரிவித்தார்.ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை செய்தி இணையதளத்திற்கு எதிரான ஒடுக்குமுறை எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நியூஸ் கிளிக் இணைய செய்தி நிறுவனத்துக்கு தில்லி போலீசார் செவ்வாய்கிழமை சீல் வைத்தனர்.

ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் மோடி அரசின் இச்செயலுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்களின் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிஎம் கேர்ஸ்-ஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், சீனாக்காரர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் நிதி வந்த காரணத்துக்காக, நியூஸ் கிளிக் மீது தேசதுரோக வழக்கு, அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டவர்களின் வீடுகளில் சோதனை, அவர்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சீன நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதி பெற்ற பிஎம் கேர்ஸ்-ஐ நிர்வகிப்பவர்கள் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.