india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ரயில்வே தொழிலாளர்கள் பேராதரவு அளித்துள்ள னர். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) செயல் தலை வர் அ.ஜானகிராமன் தலைமையில் ரயில்வே ஊழியர்களின் பிரதிநிதிகள் தில்லிக்கு நேரில் சென்று விவசாயி களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பாரத் பந்த் போராட்டத்திலும் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

                                **********************

பாரத் பந்த் போராட்டத்தில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மதிய இடைவேளை யின்போது ஆர்ப்பாட்டம் நடத்தியும், கருப்புப் பட்டைகள் அணிந்தும் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 3 அன்றும் பிஎஸ் என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                                **********************

80 கோடி மக்களை பசி,  பட்டினியில் தள்ளி தற்கொலைக்கு வழிவகுக்கும் கொடிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி  நடைபெறும் பாரத் பந்த் போராட்டத் தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு முழுமையாக பங்கேற் கிறது என்று அமைப்பின் தலைவர்கள் எஸ்.நூர்முகமது, எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

                                **********************

விவசாயிகளின் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான ஆதிவாசி மக்களும் பங்கெடுத்துள்ளனர். பாரத் பந்த் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து மலைப்பகுதிகளிலும் முழு அடைப்பு நடைபெறும் என்றும் இதர போராட்டங்கள் தொடரும் என்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் பி.டில்லிபாபு, இரா.சரவணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

;