india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவுஎடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

                                     ******************

சாதிய வன்மத்தால் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5 ஆயிரம்மாத உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் நிவாரண காசோலையை வழங்கினார்.

                                     ******************

தமிழகத்தில் பிளஸ்- 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3 ஆம் தேதிமுதல் நடத்தப்போவதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

                                     ******************

இந்தியாவில் என்.சி.ஆர் கார்ப்பரேஷன் நிறுவனமானது UPI-(enabled interoperable cardless cash withdrawing system)-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதாவதுசுருக்கமாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

                                     ******************

தமிழக கடல் எல்லைகளில் 61 நாட்்கள் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல்  15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

                                     ******************

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன்பயனர்களுக்கு ஏப்ரல் 30 ஆம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

                                     ******************

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுந்தீவன பற்றாக்குறையால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

                                     ******************

சென்னை மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளு ரிசார்ட்டை இடிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

                                     ******************

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

                                     ******************

தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

                                     ******************

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                                     ******************

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ள தாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

                                     ******************

உரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் எடுக்க தனியார்  லாரிகளை அனுமதிக்க முடியாது என்று  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                     ******************

தமிழகத்தில் சனிக்கிழமையன்று மேலும் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 பேராகஉயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

                                     ******************

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                     ******************

பணக்கார நாடுகளில் நான்கு பேரில் ஒருவக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது. ஆனால் ஏழை நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று உலகசுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

                                     ******************

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்என்றும் அவர்களுக்கு கொரோனாபரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;