india

img

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழும நிர்வாகி கெளதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளும்பெர்க் பணக்காரர்களுக்கான குறியிட்டுப் பட்டியலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.07 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலர்களாக உள்ளன.

இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலகளவில் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். கெளதம் அதானி ஆசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு அடுத்து  ஒன்பதாவது இடத்திலும் உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் லாபம் அதிகரித்ததே இந்த மாற்றத்துக்குக் காரணம். அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை உயர்வால் சில மாதங்கள் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.