india

img

2020-2021-ல் தேர்தல் அறக்கட்டளை வாயிலாக பாஜக ரூ.212.05 கோடி நிதி பெற்று முதலிடம்

2020-21-ஆம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து ரூ.258.49 கோடியை அரசியல் கட்சிகள் வாங்கியுள்ளன. அதில் ரூ.212.05 கோடி அதாவது 82% பாஜக பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் அறக்கட்டளை என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு முறையாக நன்கொடைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி ரூ.27 கோடி அதாவது 10.45% நன்கொடைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அதிமுக, திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, லோக் ஜனசக்தி கட்சி, சிபிஎம், சிபிஐ மற்றும் லோக்தந்திரிக் ஜனதா தளம் ஆகிய 10 அரசியல் கட்சிகளும் இணைந்து 19.38 கோடி ரூபாயை நன்கொடைகளாகப் பெற்றுள்ளன